இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான மற்றும் உலகளவில் வளர்ந்து வரும் மஹிந்திரா எண்ட் மஹிந்திரா லிமிடெட், இலங்கையில் மஹிந்திரா வர்த்தகநாமத்திற்கு புத்துயிர் அளித்தது. தற்போது, ஐடியல் மோட்டார்ஸ் (பிரைவேட்) லிமிடெட், ஐந்து முழுமையான காட்சியறைகள், 32 முகவர்களைக் கொண்ட வலையமைப்பு மற்றும் நன்கு வசதியளிக்கப்பட்ட பட்டறை ஆகியவற்றின் மூலம் செயல்பட்டு, ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த உயர் வளர்ச்சி மற்றும் வருவாய் செயல்திறன், இலங்கையில் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரையிலான பிற தயாரிப்புப் பிரிவுகளில் எம் எண்ட் எம் லிமிடெட்டை சேர்க்கத் தூண்டியுள்ளது. மஹிந்திரா குழுமத்திற்கும் ஐடியல் குழுமத்திற்கும் இடையிலான நீண்டகால உறவு, மஹிந்திரா ஃபைனான்ஸ், ஐடியல் ஃபைனான்ஸுடன் ஒரு கூட்டாண்மையில் நுழைந்து, 2021 ஜூலை -இல் அதன் பெரும்பான்மை பங்குதாரராக ஆனபோது மேலும் வலுப்படுத்தப்பட்டது. இவ்வாறு, ஐடியல் ஃபைனான்ஸ், மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆக உருவெடுத்துள்ளது. மஹிந்திரா ஃபைனான்ஸின் கணிசமான வலிமை மற்றும் செயல்பாட்டு வரம்பை, ஐடியல் ஃபைனான்ஸின் உள்ளார்ந்த வலிமை மற்றும் உள்ளூர் நிபுணத்துவத்துடன் இணைப்பதன் மூலம் இலங்கையின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் நோக்கத்துடன் இது செயல்படுகிறது.
ஐடியல் மோட்டார்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் தலைவர் மற்றும் பணிப்பாளர் குழு, வணிகம் மற்றும் மோட்டார் துறைகளில் சிறந்த அறிவும் திறனும் கொண்டவர்களாக உள்ளனர். துணைத் தலைவரின் முன்னணி வழிகாட்டுதலும், விருதுகள் பெற்ற விளையாட்டு மனப்பான்மையும் இணைந்து, ஒரு வெற்றிகரமான வணிகத்திற்கான சிறந்த சேர்க்கையை உருவாக்குகின்றன.